தேர்தலையொட்டி விதிமுறை... 909 சமூக வலைதளப் பதிவுகளை நீக்கியது தேர்தல் ஆணையம்

டெல்லி : தேர்தலையொட்டி விதிமுறைகளுக்கு மாறான ‌909 சமூகவலைதளப் பதிவுகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கான 7வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.

தேர்தலையொட்டி மக்களை திசை திருப்பும் வகையில், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட பதிவுகளை தேர்தல் ஆணையம், குழு ஒன்றை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதில் முகநூலில் 650 பதிவுகளும், ட்விட்டரில் 220 , ஷேர் சேட்டில் 30, யூ டியூபில் 5,வாட்ஸ் அப்பில் 3 பதிவுகளும் நீக்கியுள்ளது. பரப்புரை ஓய்ந்த பின்னரும் தேர்தலுக்கு முந்தைய நேரத்திலும் முகநூலில் 482 பதிவுகளை நீக்கியுள்ளது.

7வது கட்ட தேர்தலில் மட்டும் கட்டணம் செலுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்த 57 பதிவுகள் உட்பட மொத்தம் 647 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் முதற்கட்ட தேர்தலில் மட்டும் 342  சர்ச்சைக்குரிய பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: