அறிவிக்கப்படாத மின்தடை: எஸ்.முருகையன்-திருநின்றவூர் ரயில் பயணிகள் சங்க செயலாளர், சமூக சேவகர்.

பதிருநின்றவூர் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வீடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். சென்னையை ஒட்டியுள்ள திருநின்றவூர் பேரூராட்சிக்கு செங்கல்பட்டு மின் பகிர்மான வினியோக வட்டத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். கடந்த ஒரு வாரமாக, தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. மேலும், குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருக்கும் பொருட்களும் வீணாகி வருகின்றன. அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,  திருநின்றவூர் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளை ஆவடி மின் பகிர்மான வட்டத்தில் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும்,  மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், திருநின்றவூரில் கோடை காலத்தில் மட்டுமல்லாமல் குளிர்காலத்திலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: