ஆப்கானிஸ்தானில் அரசு ஆலோசகர் சுட்டுக்கொலை

காபூல்:  ஆப்கானிஸ்தானில் அரசு ஆலோசகர் மேனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், ஆப்கானிஸ்தானில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். வழக்கறிஞரான இவர், பெண்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உரிமைகளுக்காக பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தியவர். பத்திரிக்கை துறையில் இருந்து விலகிய பின்னர் நாடாளுமன்ற கலாசார ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காபூலில் உள்ள தனது வீட்டில் இருந்து மேனா, பணி நிமித்ததாக வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.

Related Stories: