பாழடைந்த பள்ளி கட்டிடத்தால் விபரீதம் ஏற்படும் அபாயம்

*மாணவர்களின் பெற்றோர் அச்சம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே கீழ்பாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர், பள்ளி வளாகத்தில் 60 வருடத்திற்கு முன் கட்டப்பபட்ட வகுப்பறை கட்டிடம் உள்ளது. கடந்த 5 வருடத்திற்கு முன் பழுதடைந்ததால் இந்த கட்டிடத்தில் வகுப்புகள் அருகில் உள்ள கட்டிடத்தில் நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தை முழுமையாக அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இன்று வரை கட்டிடம் அகற்ற படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 பள்ளி வேலையில் மாணவர்கள் இந்த கட்டிடத்தில் சென்று விளையாடும் நிலை உள்ளது. அப்போது, கட்டிடம் இடிந்து விழுந்தால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை  தற்போது உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: