வீடு இல்லாத ஏழைகளுக்கு பாகுபாடு இல்லாமல் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்: அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் மஞ்சுளா வலியுறுத்தல்

கோலார்: வீடு இல்லாத ஏழைகளுக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் வீடுகள் கட்டி கொடுக்க அரசு அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு செயலாளர் மஞ்சுளா தெரிவித்தார். கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பு செயலாளர் மஞ்சுளா பேசியதாவது: மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் கிராம பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால் நகர் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவையான இடங்களில் போர்வெல் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண  வேண்டும். மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்கள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும்.

ஏற்கனவே வீடு உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். எந்த காரணத்தை முன்னிட்டும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு கழிவறைகள் கட்டிக் கொடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: