பார்சிலோனா ஓபன் டொமினிக் தீம் சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் டானில் மெட்வதேவுடன் (23 வயது, 14வது ரேங்க்) மோதிய டொமினிக் (25 வயது, 5வது ரேங்க்) 6-4, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். கடந்த 15 ஆண்டுகளில் பார்சிலோனா ஓபனில் பட்டம் வென்ற 4வது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இங்கு 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நட்சத்திர வீர ரபேல் நடால், இம்முறை அரை இறுதியில் டொமினிக் தீமிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. தீம் வென்ற 13வது ஏடிபி சாம்பியன் பட்டம் இது. இவற்றில் 9 வெற்றிகள் களிமண் தரை மைதானங்களில் பெற்றவை ஆகும். கிளே கோர்ட் போட்டிகளில் முடிசூடா மன்னனாகத் திகழும் நடாலின் அடுத்த வாரிசு டொமினிக் தீம் தான் என டென்னிஸ் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள். இதனால் எதிர் வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர் (மே 26 - ஜூன் 9) மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: