இங்கிலாந்து அணியில் ஹேல்ஸ் அதிரடி நீக்கம்

லண்டன் : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் 21 நாள் தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஐசிசி உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஹேல்சிடம் நடத்தப்பட்ட 2வது ஊக்கமருந்து சோதனையிலும் அவர் தடை செய்யப்பட்ட ‘பொழுதுபோக்கு’ போதை மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 வாரங்களுக்கு அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹேல்ஸ் உடனடியாக நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியுடன் நடக்க உள்ள தொடர் மற்றும் ஐசிசி உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்தும் அவர் நீக்கபட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2017ல் இரவு விடுதியில் ஒருவரை அடித்து உதைத்ததாக பென் ஸ்டோக்ஸ், ஹேல்ஸ் இருவரும் கைதானது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: