சென்னை: சென்னை பெரியமேடு ராமா பிள்ளை தெருவை சேர்ந்தவர் அனிஷ் (24). இவர், வேப்பேரி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கோழி இறைச்சி கடையில் தோல் உறித்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம் போல் மிஷினில் கோழியின் தோலை உறித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிஷ் உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
