மத்தவங்க செஞ்சா தப்பு மோடி, அமித்ஷா செஞ்சா சரியா?: நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் நரேந்திர மோடி, பாஜ தலைவர் அமித்ஷா திரும்ப திரும்ப மீறுவதாகவும், தேர்தல் ஆணையம் அதை கண்டும் காணாததுபோல இருப்பதாலும் நீதிமன்றத்தை அணுக முடிவு  செய்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தனது டிவிட்டர் பதிவில், `பிரதமர் மோடியும் அமித்ஷாவும் நடத்தை விதிகளை திரும்ப திரும்ப மீறுகின்றனர். ஆனால் இதனைக் கண்டிக்க வேண்டிய பெரிய காவலாளியான தேர்தல்  ஆணையம் கண்டும் காணாமல் இருக்கிறது’ என்று குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார். `இதனைக் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையம் `எலக்‌ஷன் கமிஷன் அல்ல எலக்‌ஷன் ஒமிஷன்’ என்றும் நடத்தை விதிகளுக்கு அவர்கள் இருவரும் உட்பட மாட்டார்களா? என்று கேள்வி எழுப்பிய சிங்வி, `மோடி கோட் ஆப்  கான்டக்ட்’ என்றும் கிண்டலடித்துள்ளார்.

வாக்குகளை பிரித்தல், ஆயுதப் படையினரை பிரசாரத்துக்கு தூண்டுதல், தேர்தல் நாளில் பேரணி நடத்துவது உள்ளிட்ட 3 வகைகளில் நடத்தை விதிகளை அவர்கள் மீறியுள்ளனர். புகாரின் அடிப்படையில் பல கட்சித் தலைவர்களின் மீது தேர்தல் ஆணையம் விதி மீறல் நடவடிக்கை எடுத்ததை பாராட்டுகிறோம். ஆனால் இவர்கள் இருவர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எதுவுமில்லை. எனவே நீதிமன்றத்தை  அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் அவர்கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: