வங்கிக் கடன் மோசடி மாஜி மத்திய அமைச்சர் ஆஜராக சிபிஐ உத்தரவு

புதுடெல்லி:  தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான ஒய்எஸ் சவுத்ரியை, வங்கி முறைகேடு வழக்கில் விசாரணைக்காக ஆஜராகும்படி சிபிஐ உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடிப்படையாக கொண்டு பெஸ்ட் அன்ட் கிராம்டன் என்ஜினியரிங் லிமிடெட் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம் மின் சாதன பொருட்களை உற்பத்தி செய்தது.

கடந்த 2017ம் ஆண்டு ஆந்திரா வங்கியில்  ரூ.71 கோடி மோசடி செய்ததாக இதன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  இந்த வழக்கில் நிறுவனம் மற்றும் மேலாண் இயக்குனர் ககுலமாரி சீனிவாஸ் கல்யாண் ராவ் உட்பட 5 இயக்குனர் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டது.  இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஒய்எஸ் சவுத்ரிக்கு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. இன்று பெங்களூரில் உள்ள  சிபிஐ அலுவலகத்தில் சவுத்ரி ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: