மது குடிக்க நண்பன் வராததால் வீடியோ கால் செய்து தூக்கு போடுவது போல் நடித்த மெக்கானிக் சாவு

திருப்பதி: மதுகுடிக்க நண்பன் வரமறுத்ததால், வீடியோ கால் செய்து தூக்குப்போட்டு கொள்வேன் என மிரட்டிய மெக்கானிக் உயிரிழந்தார். திருப்பதி அடுத்த திருச்சானூர் இந்திரா குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவரது மகன் சிவக்குமார்(25). இவர் திருப்பதியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். மது பழக்கத்திற்கு  அடிமையான இவர், நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மதுகுடிப்பது வழக்கமாம்.இந்நிலையில், நேற்று முன்தினம் சிவக்குமார் குடித்துவிட்டு, போதை அதிகமான நிலையில், தனது நண்பரை குடிப்பதற்கு அழைத்தாராம். அவர் மறுநாள் வருவதாக கூறினாராம்.

Advertising
Advertising

தனது நண்பனை எப்படியாவது மிரட்டி வர வைக்க  வேண்டும் என்று நினைத்த சிவக்குமார், நண்பனுக்கு வீடியோ கால் செய்து, தனது அறையில் உள்ள மின்விசிறியில் புடவையை கட்டி, தன்னுடைய கழுத்தில் இறுக்கிக்கொண்டு, தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார்.  ஆனால் அவர் விளையாட்டாக செய்வதாக நினைத்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென கால்  இடறியது. மேலும், போதை தலைக்கு ஏறி இருந்ததால், கட்டிலில் கால் வைக்க முடியாமல் தவித்தபோது, சேலை கழுத்தை  இறுக்கியதில் சிவக்குமார் இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: