துணிச்சல் இருந்தால் ராஜ் தாக்கரே வீட்டில் ஐடி ரெய்டு நடத்துங்கள்: அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் சவால்

‘‘ஆளும் பாஜ அரசுக்கு துணிச்சல் இருந்தால் ராஜ் தாக்கரே வீட்டில் வருவான வரி ரெய்டு நடத்த வேண்டும்’’ என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி, மகாராஷ்டிராவில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது. அந்த கூட்டணி போட்டியிடும்  தொகுதிகளில் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா நடத்தும் பொதுக்கூட்டங்களில் அக்கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே கலந்து கொண்டு பாஜ மற்றும் சிவசேனாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது மறைமுகமாக  காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவான பிரசாரமாக இருந்தாலும், ராஜ் தாக்கரே கலந்து கொள்ளும் கூட்டத்தில் அவரது கட்சிக் கொடி மட்டுமே இடம்பெற்றிருக்கும். எந்த கட்சி வேட்பாளர்களும் மேடையில்  இருக்கமாட்டார்கள்.ராஜ் தாக்கரே கட்சி நடத்தும் இந்த பொதுக்கூட்டங்களுக்கான செலவை ஏற்பது யார் என சமீபத்தில் பாஜ தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள்தான் ராஜ்  தாக்கரே கூட்டத்துக்கான செலவை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள்தான் செய்வதாக பாஜ.வினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், ‘‘ராஜ் தாக்கரே நடத்தும் பொதுக்கூட்டத்துக்கான செலவு பற்றி பாஜ.வினர் கேள்வி எழுப்புகின்றனர்.  ஆளும் பாஜ.வுக்கு துணிச்சல் இருந்தால் ராஜ் தாக்கரே வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்தட்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ.வுக்கு ராஜ் தாக்கரே ஆதரவு அளித்தார். இந்த முறை அவர் பாஜ கூட்டணிக்கு எதிராக  பிரசாரம் செய்கிறார். இது அவர் எடுத்த முடிவு’’ என்றார்.

இதற்கிடையே, ராஜ் தாக்கரே கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு ஆகும் செலவை ஏற்கு வேட்பாளர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமிஷனிடம் பாஜ கட்சி புகார் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: