பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை 1213 மது பாட்டில்கள் பறிமுதல்: 8 பெண்கள் உள்பட 39 பேர் கைது

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மக்களவை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 16ம் தேதி முதல் இன்று வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை அடுத்த காஞ்சிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 15 மது பாட்டில்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம், விஷ்ணு காஞ்சி பகுதியில் 448 பாட்டில், காஞ்சி தாலுகாவில் 5 மது பாட்டில்கள், பாலுசெட்டி சத்திரத்தில் 24 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் வாலாஜாபாத் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 53 பாட்டில்கள், மாகரல் பகுதியில் 10 மது பாட்டில்கள், சுங்குவார்சத்திரம் பகுதியில் 30 மது பாட்டில்கள், மணிமங்கலம் பகுதியில் 8 மதுபாட்டில்கள், செங்கல்பட்டு தாலுகாவில் 25 மது பாட்டில்கள், சாலவாக்கத்தில் 83 மது பாட்டில்கள், மதுராந்தகத்தில் 120, உத்திரமேரூர் 42 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் சூனாம்பேடு காவல் நிலைய பகுதிகளில் 50 பாட்டில்களும், சித்தாமூர் 157, அச்சிறுப்பாக்கம் 22, அணைக்கட்டு 20, திருக்கழுக்குன்றம் 17, திருப்போரூர் 9, தாழம்பூர் 20, கூடுவாஞ்சேரி 19, மறைமலைநகர் 36 பாட்டில்கள் என 1213 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 8 பெண்கள் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட 8 பெண்களில் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: