மயிலாடும்பாறை அருகே மூலவைகை கரையோரம் திடீர் தீ : அச்சத்தில் விவசாயிகள்

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே மூல வைகை ஆற்றங்கரை ஓரமாக திடீரென தீ பிடித்ததால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.தேனி மாவட்டம், கடமலைமயிலை ஒன்றியத்தில் திடீர் திடீரென தீ பிடிப்பதால் பொதுமக்கள் விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வருசநாடு பஞ்சம்தாங்கி மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் இரண்டு தினங்களாக வருசநாடு வனத் துறையினர் போராடி தீயை அணைத்தனர், இந்நிலையில் நேற்று மயிலாடும்பாறை வனத்துறை அலுவலகம் அபாய வளைவுகள் அருகே திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனால் அக்கம், பக்கத்தினர் விவசாயிகள் மயிலாடும்பாறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து நிலைய அலுவலர் வீரலட்சுமணன் தலைமையிலான வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தொடர்ந்து சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். தீயை அனைத்த பின்பு இப்பகுதியில் யாராவது தீ வைத்தார்களா அல்லது தானே பற்றி கொண்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இந்த பகுதிகளில் முயல், மான், கேளையாடு, கரடி போன்ற விலங்குகள் நடமாட்டம் பகுதி. தற்போது தீ அணைக்கப்பட்டதால் வனவிலங்குகள் உயிர் தப்பியது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: