ம.நீ.ம கட்சியின் கோவை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை வெளியீடு: ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி

கோவை: கோவை மக்களவை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 38 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள இரு இடங்கள் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து, கோவை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கோவை வேட்பாளர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர். அதில், கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

* கோவையில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைத்து ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* தனியார் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும்.

* கைத்தறி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விலக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும்.

* நவீன உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், சேகரிப்பு மையங்கள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் கொண்ட பிரமாண்ட உணவுப்பூங்கா உருவாக்கப்படும்.

* சிறப்பு முதலீட்டு மண்டலமாக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற பல்வேறு வாக்குறுதிகள் கோவை தொகுதிக்கான மக்களவை தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், இந்தியாவை வழிநடத்துவது என் கனவு எனவும், தமிழகம் முதல் மாநிலமாக திகழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும்,  எனவும் அறிக்கையில் கூறினார்.  முதலில் தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் அதன் பின்னர் டெல்லி செல்வோம் எனவும் கூறினார். தமிழகத்தின் சூழல் எங்களை அரசியலில் நுழைய வைத்து விட்டது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: