காங்கிரசை ஆதரிக்க தயார் என ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ அல்கா லம்பா அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் பாஜகவின் வெற்றியை தடுக்க ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது ஆதரவை தர இருப்பதாக அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அல்கா லம்பா தெரிவித்துள்ளார். பழைய டெல்லியில் பிரச்சாரம் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் ஷாம்தினி சவுத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தயார் என்று கூறினார்.

ஜம்மா மசூதி அருகே பிரச்சாரம் செய்த கெஜ்ரிவால் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் உதவி தேவை என்று கூறியதை அல்கா லம்பா சுட்டி காட்டினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதா அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்று மக்களிடம் கருத்து கேட்டு வருகிறேன் என்றும் அவர் கூறினார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: