வேண்டுமா ‘ஏ, பி, சி’ வாங்குங்க அன்னாசி...

வெளியிலே சொரசொரப்பாக இருந்து உள்ளே இனிப்பாக இருக்கும் பழத்தை பற்றி பார்க்கலாமா? பலாப்பழமா என்று கேட்டு விடாதீர்கள். அதுவும் அப்படித்தான்... ஆனால், நாம் இங்கு இனிப்பும், புளிப்பும் இரண்டற கலந்த அன்னாசி பழத்தை பற்றி பார்க்கப் போகிறோம். அன்னாசியில் பெரும் சவாலே அதன் தோலை நீக்குவதுதான் நீளவாக்கில் முதலில் நறுக்கி, பின் இருபுறமும் நடுவில் நறுக்கவும். இப்போது தோல் சீவிப்பாருங்கள். நன்றாக வரும். சரி.. இந்த பழத்தின் பூர்வீகம் பிரேசில்.

இப்பழத்தில் கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் புரதம், இரும்புச்சத்துகள், மாங்கனீஸ், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன. மூட்டு வலியை குணப்படுத்துவதில் அன்னாசி முக்கிய பங்கு வகிக்கிறது. மூட்டு தேய்மானத்தால் ஏற்படும் வலியை போக்குவதற்கா ‘ப்ரோமெலைன்’ எனும் சத்து இதில் உள்ளது. மேலும், இதில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எளிதில் ஆறாத காயங்களையும் ஆற்றவல்லது. மேலும், நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நம்மை சிலிம் ஆக மாற்றும்.

மேலும், கால்சியம் சத்து இருப்பதால் நம் உடலில் உள்ள எலும்புகளை பலமாக்குகிறது. மலச்சிக்கலை தீர்ப்பதோடு, எளிதில் உணவை ஜீரணமாக்கும் சக்தி இதற்கு உண்டு. இதனால்தான் அசைவ விருந்துகளில் கட்டாயம் அன்னாசி இடம் பெற்றிருக்கும். பொட்டாசியம் சத்து நமது ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆகையால், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் ரெகுலராக சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழு கொல்லியாக செயல்படுகிறது. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும். அன்னாசியில் உள்ள வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களில் ஏற்படும் பார்வை கோளாறு, மாலைக்கண் நோய் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்கிறது. மேலும், அன்னாசிப்பழத்துடன் தேன் சேர்த்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒற்றைத்தலைவலியை கட்டுப்படுத்தலாம். ஞாபகத்திறனை அதிகரிக்கும்.

கர்ப்பிணிகள்  சாப்பிடலாமா?

அன்னாசிப்பழத்தில் கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இவை தொண்டை புண்களை ஆற்றுவதோடு, வயிற்று உபாதைகளையும் சரி செய்யும். எனவே, இதை கர்ப்பிணிகள் உண்டால், அதில் நிறைந்துள்ள அசிடிக் அமிலமானது சிசுவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாம்பழம் போல இதையும் கர்ப்ப காலங்களில் பெண்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மேலும், அன்னாசி சில நேரங்களில் உடலில் லேசான சூட்டை கிளப்பி விடும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: