தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு பார்வையாளரை நியமிக்கக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சிறப்பு பார்வையாளர்களை நியமிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வழக்கறிஞர் ரங்கராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் ஒரேகட்டமாக வருகிற ஏப்ரல்18ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் வேட்பாளர்களை நியமித்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள், வாக்குப்பதிவு தொடர்பான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொது பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் தூத்துக்குடிக்கு மட்டும் இரண்டு பொது பார்வையாளர்கள் பணிக்கு போடப்பட்டு உள்ளனர்.

அதேபோல் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும் 1 பொது பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மேலும் அனைத்து தொகுதிகளுக்கும் செலவின மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 1 பொது மேற்பார்வையாளர் போதாது, ஒரு சிறப்பு பார்வையாளர் குழு அல்லது கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். அதிகபட்சமாக ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்தார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் தொடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்று கொள்ள ஒப்புதல் அளித்ததால், இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: