மத்தியில் ஆளும் பாஜக அரசையும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசையும் மக்கள் வெளியேற்ற வேண்டும்: ஸ்டாலின் பிரச்சாரம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். பூவிருந்தவல்லி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்; மத்தியில் ஆளும் பாஜக அரசையும் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசையும் மக்கள் வெளியேற்ற வேண்டும். பிரதமர் மோடியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒரே நேரத்தில் வீட்டுக்கு அனுப்ப நடக்கும் தேர்தல் இது. உடலில் இருக்கும் இரு கட்டிகளை ஓரே நேரத்தில் நீக்கினால்தான் ஒரு மனிதன் காப்பாற்ற முடியும்.

மத்தியில் காங்கிரசும் திமுகவும் கைகோர்த்து ஆட்சி செய்த போது தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் வந்தன. 95 வயது வரை தமிழக மக்களுக்கு உதவி செய்தவர்தான் கலைஞர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னென்ன திட்டங்களை எல்லாம் தமிழகத்துக்கு கொண்டு வந்தார் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்விலிருந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் விலக்கு பெற முடிந்ததா? நீட் தேர்வை ரத்து செய்யுமாறு 2 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டும் எடப்பாடியால் பிரதமரிடம் வலியுறுத்த முடியவில்லை.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது ராமாற்று வேலை. கஜா புயல் பாதித்த இடங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். தஞ்சை டெல்டா மாவட்டங்களுக்கு கஜா புயலால் பாதிக்கப்பட்டவுடன் சென்றேன். ஆனால் கஜா புயல் பாதித்து 10 நாட்களுக்கு பிறகு தான் எடப்பாடி சென்றார். அதிலும் ஹாலிகாப்ட்டரில் சென்ற முதல்வர் பாதிப்பை முழுமையாக பார்க்காமல் திரும்பினார். கஜா புயலில் மாண்டவர்களுக்கான இரங்கல் கூட நாட்டின் முதல்வர் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: