நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும்; கே.எஸ்.அழகிரி

புதுலெ்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்தியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2,  விடுதலை சிறுத்தைகள் கட்சி-2, மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை சீட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1, கொமதேக 1, ஐஜேகே 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு  ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. ஏற்கனவே திமுக கூட்டணயில் காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து டெல்லியில் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்தியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி காங். வேட்பாளர்கள் குறித்து முடிவெடுக்க, நாளை காலை மீண்டும் ஆலோசனை நடைபெறும் என்று தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: