வேட்பாளர்களை அம்போன்னு விட்ட 3 அதிமுக மாஜிக்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக தற்போதைய எம்.பி.யான மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில், போட்டியிடும் இவர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று மாமல்லபுரத்தில் ஒரு கடற்கரை ரிசார்ட்டில் நடைபெற்றது. அ.தி.மு.க.வில் இருந்து சொற்ப அளவிலான தொண்டர்களே இந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர். குறிப்பாக திருப்போரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.க்களான ம.தனபால், தண்டரை மனோகரன், கணிதா சம்பத் ஆகிய மூவரும் இக்கூட்டத்தை புறக்கணித்தனர். அதேபோன்று திருப்போரூர் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்களாக இருந்த பாண்டுரங்கன், ஜெயகோமதி ரகு ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதனால் நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுமட்டுமின்றி புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவரான ஓ.இ. சங்கர் என்பவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகளான புதிய நீதிக்கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளில் இருந்து யாரும் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி நாங்கள் அ.தி.மு.க.வினருக்கு அழைப்பு விடுக்கவில்லை, கூட்டணி கட்சியினருக்கு மட்டுமே அழைப்பு விடுத்தோம் என்று வேட்பாளர்கள் கட்சியினரை சமாதானப்படுத்தினர். இதனிடையே கூட்டத்தில் அ.தி.மு.க.வினரை விட பா.ம.க.வினரே அதிகம் தென்பட்டனர்.

1லட்சம் பட்டுவாடா?

கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஒன்றிய நகர நிர்வாகிகளுக்கு முதற்கட்ட பணப்பட்டுவாடா உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணம் வழங்கப்படவில்லை. இதனிடையே, ஒன்றிய செயலாளர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், நகர செயலாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு விட்டதாக தொண்டர்களிடையே தகவல் பரவியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: