என்னடா... இது... தேவகவுடாவுக்கு வந்த சோதனை

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான தேவகவுடா குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்த அவர் தனது பேரன்கள் பிரஜ்வல், நிகில் கவுடா ஆகிய இருவருக்கும் முறையே ஹாசன், மண்டியா தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார். ஆனால் மஜத எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்பட அனைவரும் அவரை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.  இதேபோன்று காங்கிரஸ் கட்சியும் தேவகவுடா மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. இதற்காக துமகூரு தொகுதியை விட்டுக்கொடுக்கவும் தயாராக உள்ளது.

ஆனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மஜதவுக்கு தொகுதியை ஒதுக்க பிரச்னை செய்து வருகிறார்கள். பெங்களூரு வடக்கு தொகுதியில் தேவகவுடா போட்டியிடலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தனர். அங்கு, ஒக்கலிகர் ஓட்டு குறைவு என்பதால் தேவகவுடா ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மைசூரு-குடகு தொகுதியில் நிற்க அவர் முயற்சித்த போது காங்கிரஸ் அத்தொகுதியை விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் குழப்பமஐடைந்துள்ள தேவகவுடா தனது பேரனும் குமாரசாமியின் மகனுமான நிகில் கவுடாவை மண்டியா தொகுதியில் இருந்து வாபஸ் பெற்றுவிட்டு அங்கே போட்டியிடலாமா என்று ஆலோசிக்கிறார். அந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்றால் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: