பழநி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : 21ல் தேரோட்டம்

பழநி: பழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை 8 மணிக்கு திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக வள்ளி - தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தின் முன்பு மத்தளம் உள்ளிட்ட வாத்திய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சூரியன், வளர்பிறை நிலவு, மயில், வேல், சேவல் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடி, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க ஏற்றப்பட்டது. பகல் 12.30 மணிக்கு சாமி சப்பரத்தில் பட்டக்காரர் மண்டபத்தில் எழுந்தருளல், இரவு 8 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

20ம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி உத்திர தேரோட்டம்  21ம் தேதி நடக்க உள்ளது. முதலாம் நாளான நேற்று 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: