மேலூர் அருகே மீன்பிடி திருவிழா : கட்லாவை பிடிக்க களமிறங்கிய மக்கள்

மேலூர்: மேலூர் அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர். மேலூர் அருகே சருகுவலையபட்டி ஊராட்சிக்குட்பட்டது மெய்யப்பன்பட்டி. இங்குள்ள மெய்யன் கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. பரந்து விரிந்த கண்மாயில் முழங்கால் அளவிற்கு இருந்த தண்ணீர் இருந்தது. அறிவிப்பு வந்ததும் ஒரே நேரத்தில் கரையில் நின்றிருந்த பெரியவர் முதல் சிறியவர் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா மூலம் மீன்களை பிடித்தனர்.

கட்லா, ரோகு, விரால், அயிரை என சிறு மீன்கள் முதல் சுமார் 1 கிலோ எடை வரையுள்ள மீன்கள் பிடிபட்டது. சருவலையபட்டி ஊராட்சிக்குட்பட்ட கண்மாய்களில் நேற்றுடன் சேர்த்து இதுவரை 4 முறை மீன்பிடி திருவிழா நடந்துள்ளது. மற்ற ஊராட்சிகளில் ஊர் கண்மாயை மீன் வளர்ப்பவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுவதால் ஒரே நபர் முழு கண்மாய் மீனையும் பிடித்து விற்பனை செய்து விடுகிறார். இந்த ஊராட்சியில் மட்டும்தான் எந்த கண்மாயும் தனி நபருக்கு குத்தகைக்கு விடாமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: