கூட்டணி கட்சி தொகுதிகளை அதிமுகதான் முடிவு செய்யும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ தடாலடி

கோவில்பட்டி: நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: இரட்டை இலை, அதிமுகவின் நிரந்தர சின்னம். 2 முறை இச்சின்னத்தை அதிமுக மீட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

பாஜ, பாமகவை ெதாடர்ந்து மேலும் பல கட்சிகள், அதிமுக கூட்டணிக்கு வரவுள்ளன. நரேந்திர மோடிதான் பிரதமர் என தேர்தலில் முன்னெடுத்து பிரசாரம் செய்வோம். தீவிரவாதிகளின் தாக்குதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முறியடித்து வெற்றி பெற்று வருகிறது. வலுவான நாட்டை உருவாக்கிய பிரதமர் மோடிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள், அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையிலான குழுவினர் முடிவு செய்வார்கள். இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: