ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து: 2 விமானிகள் பலி

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 2 விமானிகள் பலியாகினர். காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த MIC ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய 2  விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: