அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ போட்டியிடும் 3 தொகுதிகள் : தூத்துக்குடி தமிழிசை, குமரி பொன்.ராதாகிருஷ்ணன், கோவை சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ போட்டியிடும் 3 தொகுதிகள் எவை என உறுதியாகியுள்ளது. அதில் தூத்துக்குடியில் தமிழிசை, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 5 சீட்கள் வழங்கப்பட்டுள்ளது. குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதால் பாஜவில் சீட் கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்த்த பலர் ஏமாற்றம் அடைந்தனர். இருந்த போதிலும் ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜவின் பலத்தை உறுதி செய்வோம் என்று கட்சியினர் மனம் மாறி தேர்தல் பணியை தொடங்கியுள்ளனர். அதிமுக கூட்டணியில் 5 ெதாகுதிகள் ஒதுக்கப்பட்டாலும் பாஜ போட்டியிடும் தொகுதிகள் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாஜ தரப்பில்  தென்சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி, கோவை, பொள்ளாச்சி, ராமநாதபுரம், திருப்பூர், தஞ்சாவூர், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட தொகுதிகளில் ஏதாவது 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற பட்டியல் அதிமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட 3 தொகுதிகளை வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. மீதியுள்ள 2 தொகுதிகளை அடையாளம் காணப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளதாக பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அந்த 3 தொகுதிகளில் கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கோவையில் பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை களம் இறக்க பாஜ முடிவு செய்துள்ளது.

அதே நேரத்தில் வடசென்னை தொகுதி ஒதுக்கப்பட்டால் அந்த ெதாகுதியில் வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி, எம்.என்.ராஜா, ஏ.என்.எஸ்.பிரசாத், பிரகாஷ் ஆகியோரில் ஒருவரை களம் இறக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தஞ்சாவூர் ஒதுக்கப்பட்டால் கருப்பு முருகானந்தம் களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. பெரும்புதூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் அ.வேதசுப்பிரமணியம். தென்சென்னை ஒதுக்கப்பட்டால் முன்னாள் பாஜ தலைவர் இல.கணேசன், இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், ஆகியோரில் ஒருவரையும், நெல்லை தொகுதி ஒதுக்கப்பட்டால் நயினார் நாகேந்திரன், திருப்பூர் கிடைத்தால் வானதி சீனிவாசன் ஆகியோரை களம் இறக்க பாஜவினர் தயாராக இருந்து வருகின்றனர். 1ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்கு முன்பாக பாஜவுக்கு எந்தெந்த தொகுதிகள்; வேட்பாளர் யார், யார் என்பது உறுதியாகி விடும். அந்த நேரத்தில் பாஜ வேட்பாளர்களை அறிமுகப்படுத்த பாஜ முடிவு செய்துள்ளது.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: