விக்கிரவாண்டி தேர்தல் காங்கிரஸ் சார்பில் பணிக்குழு அமைப்பு

சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.இவருக்கு ஆதரவாக பணியாற்றுவதற்காக கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் சார்பிலும் 18 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அதன்படி, இந்த குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்கபாலு, ஈவிகேஎஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்பிக்கள் விஷ்ணுபிரசாத், சுதா, எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், துரை சந்திரசேகர், மாநில துணை தலைவர்கள் முருகானந்தம், முகம்மது குலாம் மொய்தீன், ரங்கபூபதி, முன்னாள் எம்பி ராணி, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், விழுப்புரம் மாவட்ட தலைவர்கள் ரமேஷ், சீனிவாசகுமார், வழக்கறிஞர் ராஜ்மோகன் ஆகிய 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.

The post விக்கிரவாண்டி தேர்தல் காங்கிரஸ் சார்பில் பணிக்குழு அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: