காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு

மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஜே.எம்.ஜே மெரினா பேலஸ் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.

கூட்டணி கட்சிகளின் இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, திமுக கட்சி அணிகளின் நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: