புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் தக்காளி கிலோ ரூ.250...மத்தியபிரதேசம், டெல்லி விவசாயிகள் அதிரடி

லாகூர்: புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவின் மத்திய பிரதேசம், டெல்லி மாநில விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை முழுவதுமாக நிறுத்தியுள்ளனர். இதனால், அந்நாட்டில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.250 ஆக உயர்ந்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு, பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்-ஏ-முகமது இருப்பது தெரியவந்தது. ெதாடர்ந்து, இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக வர்த்தக ரீதியான சில தடைகளையும், கூடுதல் வரிவிதிப்புகளையும் விதித்து மேல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வந்த மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி மாநில விவசாயிகள் அதனை முழுவதுமாக சப்ளை செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால், பாகிஸ்தானில் தக்காளி வரத்து வெகுவாக சரிந்து, அங்கு தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கு 50 முதல் 70 லாரிகளில் தக்காளிகள் அனுப்பப்பட்டன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சேர்த்து நாளொன்றுக்கு சுமார் 3,000 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது, ஏற்றுமதி முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. மற்ற நாடுகளிடம் பெறுவதைவிட இந்தியாவிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு பாகிஸ்தான் தக்காளி கொள்முதல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், பாகிஸ்தானில் பச்சை மிளகாய் கிலோ ரூ.160, சிவப்பு மிளகாய் கிலோ ரூ.300, இஞ்சி கிலோ ரூ.150, உருளைக்கிழங்கு கிலோ ரூ.70, வெங்காயம் கிலோ ரூ.90, கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சிம்லா மிளகாய் ஆகியவை தலா கிலோ ரூ.110 என்ற விலைவாசியில் விற்பனையாகி வருகிறது. எல்லையில் தொடர் பதட்டம் நிலவி வருவதால், பாகிஸ்தான் நாட்டுக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் செல்வதில் சிக்கல் நீடிப்பதால், அங்கு அந்த பொருட்கள் கிடைக்காமல் பலமடங்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: