டிரம்பை சந்திக்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயிலில் பயணம் : ஹனோய் நகரில் குவியும் செய்தியாளர்கள்!

பியோங்கியாங் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன் ரயிலில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் அவர் வரும் வழிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வியட்நாமில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன், வடகொரிய அதிபர் கிம் ஜோன் சந்திப்பு நடைபெற உள்ளது. இதையடுத்து வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் இருந்து வியட்நாம் தலைநகரான ஹனோய் வரையிலான கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூர பயணத்தை பாரம்பரியம் மிக்க ரயிலில் கிம் ஜோன் உன் தொடங்கியுள்ளார். கிம் ஜோன் உன் பயணத்தை தொடங்கும் போது ஏராளமான மக்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கிம் ஜோன் உன்னின் ரயில் பயணம் தொடங்கியுள்ள நிலையில், அந்த ரயிலானது நாளை ஹனோயை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் சென்டோசா தீவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோர் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த சந்திப்பின்போது, தமது நாட்டில் உள்ள அணு ஆயுதங்களை நிரந்தரமாக அழிக்க உறுதியளிக்கும் ஒப்பந்தத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வியட்நாம் நாட்டின் நகரான ஹனோய் நகரில் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பின்போது செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,600க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் வருகை தந்துள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: