கீழ்ப்பாக்கம்: ஒருதலை காதலால் திருமணமான பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிசென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (30). இவரது மனைவி சரண்யா (24). இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. சரண்யா கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் நிறுவன வரவேற்பறையில் பணிபுரிந்து வருகிறார்.
இதே நிறுவனத்தில் ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த விக்டர் (41). நிர்வாக பிரிவில் வேலைசெய்து வருகிறார். சரண்யாவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 ஆண்டாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதையறிந்த விக்டர், சரண்யாவிடம் அடிக்கடி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சரண்யா தான் திருமணமானவர் என்றும், தனக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது என்றும் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், விடாமல் விரட்டிய விக்டர், திருமணமானாலும் பரவாயில்லை நான் காதலித்துகொண்டு தான் இருப்ேபன், என கூறி வந்துள்ளார். இதனால், வேறு வழியின்றி, எனக்காக நீ 5 ஆண்டுகள் காத்திருந்தால், உனது காதலை ஏற்கிறேன், என சரண்யா கூறியுள்ளார். இதற்கிடையில் கடந்த 1 மாதத்திற்கு முன், சரண்யா தனது கணவனுடன் ேசர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆனாலும், விக்டர் என்னை காதலிக்க ேவண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.