சென்னையில் தனியார் குடோனில் 18 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்: 11 பேர் கைது

சென்னை: சென்னை மண்ணடியில் தனியார் கிடங்கில் இருந்து 18 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹாஜா, மாலிக், அபு உட்பட 11 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரபு நாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை முதலே தொடர்ந்து வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கொண்டுவந்து சென்னை மண்ணடி பகுதியில் உள்ள ஹாஜா என்பவருக்கு சொந்தமான குடோனில் கிட்டத்தட்ட 18 கிலோ தங்கம் மற்றும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த குடோனில் இன்று காலை அதிரடியாக சோதனை செய்து அங்கிருந்த தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த குடோன் உரிமையாளர் ஹாஜா, மாலிக், அபு உட்பட 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் இருவர் இவர்களுக்கு உதவியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை உயரதிகாரிகளும் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: