திருட்டு நகைகளை விற்க முயன்ற 3 பேர் கைது

புதுடெல்லி: ரூ.35 லட்சம் திருட்டு நகைகளை, விற்க முயன்ற சகோதரர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லி மதன்கீர் பகுதியை சேர்ந்தவர் கீதா(35). இவருக்கு விஷ்ணு(25) என்ற சகோதரியும், பிகாஸ்(20) என்ற சகோதரனும் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் மதன்கீர் பகுதிக்கு உட்பட்ட நகைக்கடைக்கு சென்றனர். அங்கு பல லட்சம் தங்கம் நகைகளை கொடுத்து விற்க வேண்டும் என கூறினர். நகைக்கடைக்காரர் அதனை ஆய்வு செய்தபோது, நகைகளிலிருந்த கற்கள் நீக்கப்பட்டிருந்தது. மேலும் நகைகளும் புதிதாக இருந்ததால், சந்தேகமடைந்த நகைக்கடைக்காரர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், மூவரையும் விசாரித்தனர். அப்போது அது திருட்டு நகை என ஒப்புக்கொண்ட அவர்கள் கூறியதாவது:கடந்த ஞாயிற்று கிழமை சாராய் ரோகில்லா ரயில் நிலையத்தில் நகைகள் இருந்த பை கிடைத்தது. நகைகளில் தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தது. விலையுயர்ந்த கற்களை அகற்றினால் எளிதில் நகைகளை விற்கலாம் என்று கருதி அவற்றை நீக்கி கடைக்கு கொண்டு வந்தோம். தற்போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம் என்று தெரிவித்தார். அவர்களை கைது செய்த போலீசார் ₹35 லட்சம் நகைகள் மீட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: