₹15 லட்சத்தில் கட்டப்பட்டது அங்காடியில் விற்காமல் வெளியே வைத்து மீன்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்

*மீன் கழிவுகளால் சுகாதார கேடு

*  நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குறிஞ்சிப்பாடி :    குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் மீன் அங்காடிக்கு வெளியே தார்ப்பாய்களை கட்டி, மீன் விற்பனை செய்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு,  சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளில் ஏரியில் பிடிக்கப்படும் மீன்கள், கடல் மீன்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

alignment=

இதையடுத்து வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததன்பேரில் குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில், கடந்த 2007-08-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீன் அங்காடியை கட்டிக் கொடுத்தார். ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த அங்காடியில் மீன் மற்றும் ஆட்டுக்கறி விற்பனை நடைபெற்று வருகின்றது. ஆனால் கடந்த சில மாதங்களாக மீன் விற்பனைக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்யாமல் வாகனங்கள் நிறுத்தும் தளத்தில் தார்பாய்களை கட்டி, அதன் கீழ் அமர்ந்து மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். விற்பனை முடிந்ததும் மீன் கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. மேலும் பேரூராட்சி பகுதிகளில் சாலை ஓரங்களில் மீன்கள் விற்பனை செய்து வருகின்றனர்.  மீன் அங்காடியில் மீன் விற்பனை செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும். வாகனங்கள் நிறுத்த தனிஇடம் ஒதுக்க வேண்டும். மீன் கழிவுகள் அங்கேயே கொட்டுவதை தடுத்து, வெளிப்புறங்களில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடங்களில் கொட்ட வேண்டும், இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: