பணி நேரத்தில் அலுவலகத்தில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களில் பணி நேரங்களில் கண்டிப்பாக இருக்கவேண்டும், இல்லையென்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான உதவி தொகையை பெற கிராம நிர்வாக அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற மறுக்கிறார்கள் என்ற தகவலை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் அலைக்கழிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது, இதையடுத்து பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நேரத்தில் அலுவலகங்களில் இல்லாததால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சில பயனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகின்றனர்.

எச்சரிக்கை ஆடியோ

மேலும் மத்திய அரசு வழங்கும் ரூ. 6000 உதவி தொகையை பெறுவதற்கு விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும் நெல்லை ஆட்சியரிடம் புகார்கள் குவிந்தன. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை ஆடியோ ஒன்றை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அனுப்பியுள்ளார். அதாவது பணி நேரங்களில் அலுவலகத்தில் இல்லாத கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று ஆடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: