புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசை விமர்சித்த மாஜி பஞ். தலைவர் கைது

அகமத்நகர்: மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள விஷ்பூர் கிராமத்தில்  புல்வாமாவில் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர். 

அப்போது அந்த கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சயத் ஜப்பார் அமீர் மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சயத் ஜப்பார் அமீரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: