நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

நெல்லை: நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு இன்று நடந்தது.நெல்லை மாநகர ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு இன்று காலையில் நடந்தது. எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற, 18 வயதிற்கு மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரசிங் ரத்தோர், துணை கமிஷனர் சுகுணாசிங் ஆகியோர் உத்தரவின் பேரில், நெல்லை ஆயுதப்படை உதவி கமிஷனர் பாஸ்கர் ஆலோசனையின் பேரில் இத்தேர்வு நடந்தது.நெல்லை மாநகர ஊர்காவல் படை வட்டார தளபதி செல்வம் முன்னிலையில் தேர்வில் பங்கேற்றவர்கள் விண்ணப்பங்களை நிரப்பி, உயரம் உள்ளிட்ட தகுதிகள் சரிபார்க்கப்பட்டன.

சுமார் 50 பேர் தேர்வில் கலந்து கொண்ட நிலையில், இதில் 15 ஆண்களும், 17 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டம், தீ விபத்து முதலுதவி, உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். அதன்பின்னர் மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். ஒரு நாள் பணிக்கு ரூ.560 ஊதியமாக அளிக்கப்பட உள்ளது. ஊர்காவல் படை தேர்வு நிகழ்ச்சியில் பொறுப்பு அதிகாரிகள், ஊர்காவல் படையினர் பங்கேற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: