50 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட கறம்பக்குடி அரசு பேருந்து திடீர் நிறுத்தம்

கறம்பக்குடி: 50ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட கறம்பக்குடி அரசு பேருந்து திடீர் நிறுத்தப்பட்டதால் ஆபத்தான பயணத்தில் மாணவர்கள் திக்... திக்.. பயணத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு பொதுமக்களின் நலன்கருதி கும்ப கோணம் அரசு கோட்ட பணிமனையின் மூலம் தஞ்சாவூரில் இருந்து மருங்குலம் ,ரெகுநாதபுரம், அம்புக்கோவில் வழியாக கறம்பக்குடி வரை சோழன் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.  சுமார் 50ஆண்டுகளுக்கு மேலாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இப்பேருந்து இயங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமம் இல்லாமல் பயனடைந்து வந்தனர். குறிப்பாக விவசாயிகள், வியாபாரிகள், அரசு அலுவலர் கள் பெரிதும் பயன் பெற்று வந்தனர்.

அதிலும் அரசு பேருந்து என்பதால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் இலவச பஸ்பாஸ் மூலம் பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.  கறம்பக்குடியில் இருந்து தஞ்சாவூர் வரை தினம் தோறும் இரவு 9.50 மணி வரை அரசு பேருந்து இயக்கபட்டதால் அனைத்து தரப்பு பொது மக்களும் பயனடை ந்து வந்தனர். ஆனால் திடீரென்று கடந்த ஒரு மாதத்திற்கு முன், தினம்தோறும் இயக்கப்பட்ட இந்த அரசு பேருந்து திடீர் நிறுத்தப்பட்டதால் கறம்பக்குடி , அம்புக்கோவில், ரெகுநாதபுரம், தட்டாமனைபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அரசு பேருந்து நிறுத்தபட்டதால் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இலவச பஸ்பாஸ் பயணத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பேருந்துகளில் கூட்டம் எந்த நேரமும் அலை மோது கிறது. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்து படியில் தொங்கியவாறும், மேற்கூரையில் அமர்ந்தும் தினம் தோறும் ஆபத்தான பயணத்தில் செல்கின்றனர் இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: