பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது...பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயங்கரவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது அதை ஊக்குவிப்பதாக அமையும் என தெரிவித்தார். இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இரு நாடுகளிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி உலக அமைதிக்கும், ஸ்திரதன்மைக்கும் தீவிரவாதிகள் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதை நானும், அர்ஜென்டினா அதிபர் மேக்ரியும் ஒப்புக் கொண்டுள்ளோம். புல்வாமாவில் நடந்த கொடூரமான தாக்குதலின் மூலம் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்து விட்டது என்பது நிரூபணமாகி உள்ளது. எனவே உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதனை அடுத்து பேசிய அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி, ஜம்மு-காஷ்மீர் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மனவருத்தத்தை தருகிறது. உயிரிழந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் எந்த விதமாக தீவிரவாத தாக்குதல் நடத்தினாலும் அதனை கண்டிக்கிறோம்.மேலும் மனிதகுலத்தை காக்க தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மேக்ரி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: