திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா : பிப். 10ல் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தேரோட்ட வைபவம் 19ம் தேதி  நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடக்கிறது.

இம்மாதம் 21ம் தேதி  வரை 12  நாட்கள் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இதில் 5ம் திருநாளையொட்டி வரும் 14ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையாகி குமரவிடங்க பெருமான் சுவாமியும், தெய்வானை அம்பாள் தனித்தனியாக தங்கமயில் வாகனங்களில் எழுந்தருள்கின்றனர். 15ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருள்கின்றனர். 16ம் தேதி அதிகாலை 5 மணிக்குள் கோயிலில் சண்முகப்பெருமான் உருகு சட்டசேவையும் காலை 8.45 மணிக்குள் சுவாமி ஆறுமுகநயினார் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படியை சேர்ந்ததும்  சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.

பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் சுவாமி எழுந்தருள்கிறார். 17ம் தேதி அதிகாலை 5மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருள்கிறார். 19ம் தேதி காலை 6 மணிக்குமேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். முதலில் விநாயகர், அடுத்து சுவாமி, பின்னர் அம்மாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன. 20ம் தேதி இரவு தெப்ப உற்சவமும். 21ம் தேதி 12ம் திருவிழாவையொட்டி மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் மலர்கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகிறார். திருவிழா நாட்களில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: