சென்னை: திமுக ஆட்சி அமைந்த கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 98.23% ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. 2025 டிசம்பர் வரை 32,61,153 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 21,09,629 ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 20,56,919 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் விரைவில் ஆய்வு செய்து விநியோகம் செய்ய உணவுப்பொருள் வழங்கல்துறை உத்தரவு அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகள் மூலம் 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது.
இதில் 98.45 லட்சம் முன்னுரிமை PHH ரேஷன் கார்டுகளில் 3 கோடி உறுப்பினர்களும், 18.64 லட்சம் அந்தியோதயா AAY ரேஷன் கார்டுகளில் 62.88 லட்சம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இரண்டு பிரிவினருக்குமான அரிசி ஒதுக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கோதுமையை ஒன்றிய அரசு தேசிய ஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யும் தாய்மானவர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வழங்கி வருகின்றனர்
இந்தநிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தற்போது புதிதாக ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு 98% பேருக்கு அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல்துறை கூறியுள்ளது. 2025 டிசம்பர் வரை 32,61,153 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 21,09,629 ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 20,56,919 குடும்ப அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
