சென்னை : மாமல்லபுரம் மற்றும் ஈசிஆர் சாலை பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல், விடுதி மேலாளர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நள்ளிரவு 1 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிச.31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
