கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் சுமார் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 6,500 சதுர அடி பரப்பளவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மைதானத்திற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்துவைத்துள்ளார்.
மைதானத்தை திறந்து வைத்ததுடன் அங்கிருந்த வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் ஒருபகுதியாக ஏராளமான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ரூ.162 மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார். ஹாக்கி மைதானம் திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் 10,626 பயனாளிகளுக்கு ரூ.136 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.
சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாக உதயநிதிஸ்டாலின் கூறினார்.
