எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் அவருடைய வாழ்த்துடன் திருப்பரங்குன்றம் வரலாறு நூல் வெளியிடப்பட்டது: சு.வெங்கடேசன்

மதுரை: எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் அவருடைய வாழ்த்துடன் திருப்பரங்குன்றம் வரலாறு நூல் வெளியிடப்பட்டது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் வரலாறு கடந்த 1981 ஆம் ஆண்டு தமிழக தொல்லியல்துறை சார்பில் வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதுதான் திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் எது என வரையறுக்கப்பட்டது. எம்.ஜி.ஆரை விட எடப்பாடி பழனிசாமி சிறந்த நிர்வாகியா? என கேள்வி எழுப்பினர். எம்.ஜி.ஆர். அரசின் முடிவுக்கு எதிராக பழனிசாமி செயல்பட்டால், அவர். எம்.ஜி.ஆர். விசுவாசி அல்ல என தெரிவித்தார்.

Related Stories: