ட்வீட் கார்னர்... அறுவை சிகிச்சைக்கு பின்!

இங்கிலாந்து டென்னிஸ் நட்சத்திரம் ஆண்டி மர்ரே (31 வயது), இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆண்டு ஜனவரியில் இதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் மீண்டும் களமிறங்கி விளையாடி வந்த நிலையில், தாங்க முடியாத வலி காரணமாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், லண்டனில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலோகத்தாலான இடுப்பு எலும்பு பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் சோர்வாக உணர்ந்தாலும், இத்துடன் வலியில் இருந்து விடுதலை கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று தகவல் பதிந்துள்ளார். அவர் விரைவில் குணமடைய டென்னிஸ் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: