மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து முதல்வர் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை : ஸ்டாலின் சாடல்

திருச்சி : மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆய்வறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்திருக்கும் நிலையில், அதனை கண்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுவரை ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார். திருச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரணிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் இவ்வாறு கூறினார். மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி தரப்பட்ட விரிவான அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட தமிழக அரசு உடனடியாக தடை பெற வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளார். இதனிடையே திருச்சியில் நடைபெற்ற முன்னாள் எம்எல்ஏ பரணிகுமார் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,மேகதாது அணை கட்ட முழு ஆய்வு அறிக்கையை கர்நாடக அரசு தன்னிச்சையாக தயாரித்து, மத்திய அரசிடம் வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது; முதல்வர் இதுவரை ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிடாதது வேதனை அளிக்கிறது; என்றார்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சனாதன பயங்கரவாதத்துக்கு எதிராக தேசம் காப்போம் மாநாடு என்ற பெயரில் திருச்சி பொன்மலை ஜி.கார்னரில் இன்று மாலை 5 மணிக்கு மாநாடு நடக்கிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை வகிக்கிறார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் கொடிக்குனில் சுரேஷ், மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: