இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மெகுல் சோக்சி

புதுடெல்லி: வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,356 கோடி கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த வங்கி மோசடியை விசாரித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணையில், அவர்கள் ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சட்டப்பூர்வமாக இந்தியாவுக்கு திருப்பி அழைத்து வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ஆண்டிகுவா நாட்டின் குடியுரிமை கிடைத்ததால் மெகுல் சோக்சி தனது இந்திய பாஸ்போர்ட்டை கயானாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: