நிறுவனங்களின் இ-மெயில் முகவரியை முடக்கம் செய்து போலி சிம்கார்டு மூலம் பல கோடி மோசடி: 2 நைஜீரியர்கள் உட்பட 6 பேர் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம், சைப்ராபாத் காவல்துறை ஆணையாளர் சஜனார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நைஜீரியாவை சேர்ந்தவர் இபிபோ இன்னோசன்ட் என்கிற ஜேம்ஸ். இவர், நைஜீரியாவில் இருந்தபடி இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு ஹேக்கிங் இமெயில் ஐடிகளை அனுப்பி அதன் மூலமாக அந்நிறுவனத்தின் இமெயில் ஐடியை முடக்கியுள்ளார்.பின்னர் அதிலிருந்து அந்நிறுவனத்தின் தகவல்களை திருடி நிறுவன உரிமையாளரின் வங்கியுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணின் சிம்கார்டை போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கி வார இறுதி நாட்களில் உரிமையாளரின் சிம்கார்டை முடக்கம் செய்து புதிய சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பாங்கிங் வழியாக பணத்தை கொள்ளையடித்துள்ளார். இந்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இந்த மோசடி  குறித்து சம்ஷாபாத்தில்  உள்ள தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பி.வெங்கடகிருஷ்ணா கடந்த மாதம் 18ம் தேதி புகார் அளித்தார். இந்த மோசடியில்  கடந்த மாதம் 15ம் தேதி வெங்கட கிருஷ்ணாவின் வங்கிக் கணக்கில் இருந்து ₹5 லட்சம் கொல்கத்தாவில் உள்ள வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நைஜீரியாவில் உள்ள முக்கிய குற்றவாளியான இபிபோ இன்னோசன்ட்  நைஜீரியாவிலிருந்து போலி இ-மெயில் மூலமாக வெங்கட கிருஷ்ணாவின் தகவல்களை திருடி பணப்பரிமாற்றம் செய்து வந்தது தெரியவந்தது.

இதற்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஹென்றி(25),  சந்தோஷ் பானர்ஜி(52),  அன்கான் சஹா(31), ரஜட் குண்டு(35), சந்தன்  வர்மா(42),  சஞ்சிப் தாஸ்(38) ஆகியோர் துணையாக இருந்துள்ளனர். இதில் சந்தோஷ் பானர்ஜி ஏஜென்டாக செயல்பட்டு கொல்கத்தாவில் உள்ள வங்கி கணக்கில் இருந்து நைஜீரியாவில் உள்ள ஜேம்ஸ்சுக்கு  பணத்தை மாற்றி அனுப்பி உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது  நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நைஜீரியாவில் உள்ள ஜேம்ஸ் விரைவில் கைது செய்யப்படுவார். மேலும் இதுபோன்று நாடு முழுவதும் ஐதராபாத்தில் இரண்டு நிறுவனமும், சென்னையில் நான்கு, குஜராத், மும்பை, கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 24  நிறுவனங்களிடமிருந்து பல கோடி ரூபாய் வரை இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: