பாம்பாறு தரைப்பாலத்தை கடப்பதில் சிக்கல் ... பிரமாண்ட பெருமாள் சிலை 2வது நாளாக நிறுத்தி வைப்பு

ஊத்தங்கரை: பாம்பாறு தரைப்பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பிரமாண்ட பெருமாள் சிலை 2வது நாளாக அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து ராட்சத இயந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலை, ராட்சத லாரியில் ஏற்றி கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, கடந்த மாதம் 7ம் தேதி புறப்பட்டது. வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் காலை ஊத்தங்கரை நோக்கி புறப்பட்டது.

 அப்போது, சுமார் 6 கி.மீ. தொலைவில் பாம்பாறு குறுக்கிட்டது. அங்குள்ள தரைப்பாலத்தை கடக்க வசதியாக ஏற்கனவே மண் கொட்டி வைத்திருந்தனர். லாரியுடன் சேர்த்து சிலையை இழுப்பதற்காக ராட்சத இயந்திரமும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், தரைப்பாலத்தில் கூடுதல் மண் கொட்டினால் மட்டுமே மேற்கொண்டு சிலை செல்ல முடியும். இதற்கு மேலும் ஒரு ராட்சத இயந்திரம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை சென்னையில் இருந்து வரவழைக்க வேண்டி உள்ளது. அந்த வாகனம் வந்ததும், மண் கொட்டி தரைப்பாலத்தின் வழியாக சென்று விட்டால், சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்தங்கரையை அடைந்து விடலாம். இதற்காக 2வது நாளாக தரைப்பாலம் பகுதியில் சிலை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: